புகைப்படங்கள்

-----------------
கறுப்பு வெள்ளை பழுப்பு கலரு
கலந்து எடுத்த பழைய படங்கள்..

சட்டம் கோர்த்து கண்ணாடி போட்ட
சுவரில் தொங்கும் பழைய படங்கள்..
மூலை பார்த்து கறையான் புசித்து
சட்டம் உடைய பரணில் ஒளிந்து
இன்றும் வாழும் பாட்டன் படங்கள்..

பாதி அமர்ந்து மீதி நின்று
சேட்டை செஞ்சு சேர்ந்து எடுத்து
கத்தி அழுது சண்டை போட்டு
சில்லறை கொடுத்து வாங்கி வந்து
அலமாரி அடுக்கில் அசந்து உறங்கும்
பள்ளி கால நினப்ப சொல்லும்
கருப்பு வெள்ளை வண்ண படங்கள்..

சேர்த்த பணமும் கடனும் சேர்த்து
சொந்த பந்தம் ஒன்னு சேர்த்து
அம்மி மிதி்க்க அருந்ததி பார்க்க
கணக்கு பார்த்து படம் எடுத்து
படம் எடுப்பவன் சுருள் மாத்த
மனசு மட்டும் பரிதவிக்க
மொய் பையில் கொஞ்சம் எடுத்து
மொத்த மெத்த ஆல்பம் போட்டு
புது தம்பதி பார்க்க வந்த
சொந்தக்காரன் வெறுத்து போக
காபி காரம் சேர்த்து கொடுத்து
தொடை வலிக்க ஆல்பம் வச்சு
பார்க்க சொல்லி கொடுமை செஞ்சு
தன் புள்ள திருமண படங்கள்..

வீட்டில் வசிக்கும் படங்கள் மட்டும்
ஏதோ ஒரு நினப்ப சொல்லும்..
எத்தன வருசம் போனாலும் மனசு
அந்த நாள அசை போடும்..

ஆயிரம் படம் கைபேசிக்குள்ள
ஆனா அதுல ஏதோ குறையுது..
அடுத்த கைப்பேசி மாத்தும் போது
அத்தனையும் அழிஞ்சு போகுது..
வாய குவிச்சு கோன மூஞ்சி வச்சு
எடுத்த செல்ஃபி திரும்பி பார்த்தா
எரிச்சல் கூட சேர்ந்து வருது..
எகிறி குதிச்சு எத்தன படம் இருந்தும்
மூச்சு நின்னு போன பின்னே
பெருசு பண்ண பாஸ்போர்ட் படத்த
சுத்தி உள்ள சொந்தம் தேடுது..
------------
சாம். சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (7-Nov-20, 10:39 pm)
சேர்த்தது : Sam Saravanan
Tanglish : pugaipatangal
பார்வை : 105

மேலே