முத்தழகி மூன்றாம் வகுப்பு

முத்தழகி மூன்றாம் வகுப்பு.

1️⃣2️⃣3️⃣4️⃣5️⃣6️⃣
பழுத்த பழங்கள் வீழ்வதும் ,
விதைத்த விதைகள் முளைவதும் ,
இறைவன் நடத்தும் பள்ளியில் ,
இயற்கை நடத்தும் பாடங்கள் .

அச்சமும் பயமும் கடுகளவின்றி.
மெச்சவும் படித்திடும் பெருமிதத்தில்
முறையாய் அணிந்த சீருடையில்
முதுகு சுமந்தது புத்தகத்தை.

எதிர்த்த வீட்டு இளமாறன் --என்
இடது கையை பிடித்தபடி
இராணுவ வீரன் பெரு நடையில் --
எங்களை
நடத்திச் செல்வாள் அறிவழகி ...

அன்னை வடிவில் ஆசிரியையும்
அழகாய் சொல்லிய தமிழ் பாட்டு அடுத்த வகுப்பும் ரசித்திடுமே
இனிய எங்கள் குரல் கேட்டு.

பாட்டுக்கேற்ற ஆட்டத்தை
பழகிப் பழகி மகிழ்ந்திடவே தானும் தன்னை இணைத்தபடி
தாளம் தட்டும் என் கால் கொலுசு.

ஆண்டவன் பார்வையில் என்
செயலும்.
ஆனவம் என்றே தோனிறிடவோ
கோபப் பார்வையில் எனை நோக்கி கொரோனா என்ற விதை
தெளித்தான்.

அழகாய் கேட்ட என்பாட்டு
அடங்க போட்டுட்டான் வாய்ப்பூட்டு ஆடித் திரிந்த என்காலும் , அடைத்தே முடக்கிட்டான் வீட்டுக்குள்.

அலைபேசி கேட்டு தினந்தோறும் அழுத நாட்கள் பலவாகும். அசந்த நேரம் அதை எடுக்க
அப்படி நிற்பேன் கால்கடுக்க.

விளைவோ இன்றென் விதியாக
வேறெங்கு ஒழித்தே வைத்தாலும் இணையச் செறிவில் என் அம்மா
எடுத்துத் தருகிறாள் படிப்பதற்காம்.

தோழிகள் நிறைந்த வகுப்பறையும் பாடம் நடத்தும் ஆசிரியையும்--
இன்று.
கலாம் ஐயா கானச்சொன்ன கனவாய் மட்டுமே காண்கின்றேன்.

இப்ப .......

சிலந்தி வலையில் சில மாதம்
சிக்கிய பூச்சியாய் என் வாழ்வு.
குழந்தைகள் தினத்தால்
இன்றெனக்கு
கொடுத்திட முடியுமா அப்பெரு
மகிழ்ச்சி..........

க.செல்வராசு..

எழுதியவர் : க.செல்வராசு (18-Nov-20, 3:14 pm)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 62

மேலே