நீ உயிர் கொடுக்க துணிந்தாயோ 555

***நீ உயிர் கொடுக்க துணிந்தாயோ 555 ***


தோழனே/தோழியே...


காதலும்
காதலிப்பதும்
இனி
மையானது...

காதல் மட்டுமே
வாழ்க்கையும் அல்ல...

உன்
வாழ்வின் முடிவும் அல்ல...

காதலின் வலிகளை உணராதவர்கள்
எவருமில்லை உலகில்...

உன்னை கொடுமை படுத்தியது
யாருமில்லை நீயேதான்...


நீ வெறுத்து செல்லும்
விஷயங்கள் வேடிக்கையானவை...

உன்
பெற்றோரும்
உட
ன்பிறப்பும்...

உனக்கு விரோதியாக
உன் பார்வைக்கு...

வெறுத்து செல்லும்
சில உறவுகளுக்காக...


நீ உயிர்
கொடுக்க துணிந்தாயோ...

உன்னை எப்போதும்
தாங்கி கொண்டு இருக்கும்...

உறவுகளுக்காக நீ
என்ன செய்ய போகிறாய்...

சின்ன சின்ன தோல்விகளுக்கு
நீ துவண்டுவிட்டால்...

போராட்டமான உலகில்
நீ வாழ்ந்து சாதிப்பது எப்படி...


உளியை தாங்கும்
பாறைதான் சிலையாகும்...

இன்று துன்பங்களை கடந்து
செல்லும் நீயும் நாளை வைரமாவாய்...

அன்று நீ உணர்வாய்
கடந்து
வந்த வலிகள் எல்லாம்...

உன் ஆடையில் ஒட்டிய
சிறு துரும்புபோல...

வாழ்க்கை
இன்பமாக வாழ்வதற்கே.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (21-Nov-20, 9:35 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 406

மேலே