ஒருநாளாவது என்னருகில் நீ வரமாட்டாயா 555
***ஒருநாளாவது என்னருகில் நீ வரமாட்டாயா 555 ***
என்னுயிரே...
என் கனவில்
நீ வருவதுமில்லை...
காத்திருக்கும் நேரத்தில்
கண்ணெதிரிலும் வருவதில்லை...
நீ போகும்
போதும் வரும் போதும்...
உன்னை ஒருமுறை
பார்க்க வேண்டும்...
ஆசையில்
காத்துகொண்டு இருக்கிறேன்...
உன்
தோழியின் கூட்டத்தோடு...
மறைந்துகொண்டு தினம்
பார்த்து செல்கிறாய்...
என் மனதில் இருந்துகொண்டே
உன்னை தேட வைக்கிறாய்...
ஒருநாளாவது என்னருகில்
நீ வரமாட்டாயா...
ஏக்கத்தில் நான்
தொடர்ந்து வருகிறேன்...
உன் நிழலை போல
பல நாட்களாய்...
என்னிடம்
அன்பு
அன்பு
காட்ட வேண்டாம்...
இறுதிவரை என்னை
வெறுக்காமல் இருந்தாலே...
அந்த சந்தோசம்
ஒன்றே
ஒன்றே
போதுமடி கண்ணே.....