மரணத்தின் விளிம்பில் நிற்பதாய் உணர்கிறேனடி 555

*மரணத்தின் விளிம்பில் நிற்பதாய் உணர்கிறேனடி 555 *





ன்னுயிரே...


உன்னை நான் தினம்
தொடர்ந்து வந்த போதெல்லாம்...

என்னை தொந்தரவு
செய்யதே என்றாய்...

அன்று முதல் உன் கண்களில்
படாமல்
உன்னை தொடர்ந்துவந்தேனடி...

எதார்த்த சந்திப்பில்
என்னை கேட்கிறாய்...

என்னை
மறந்துவிட்டாயா என்று...

உனக்காகவே
விலகி நின்றேன் அன்று...

இன்று மரணத்தின் விளிம்பில்
நிற்பதாய் உணர்கிறேனடி...

ன்
வார்த்தையை கேட்டதும்...

இப்போது சொல்
உன்னை
நான் தொடரவா...

நான் மொத்தமாக தொலைந்து
போகவா சொல்லடி கண்ணே.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (29-Nov-20, 5:20 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1004

சிறந்த கவிதைகள்

மேலே