திருவளர்ச்செல்வன் திருநிறைச்செல்வன் பொருள் அறிக
திருமண அழைப்பிதழில் மணமக்கள் பெயருக்கு முன்னால் ---
திருவளர்ச்செல்வன் /செல்வி என்று போட்டிருப்பார்கள் . இதற்கு அந்த வீட்டின் மூத்த மகன் அல்லது மகளின் திருமணம் என்பது பொருள் .
திருநிறைச்செல்வன் /செல்வி என்று போட்டிருந்தால் இளைய மகன் அல்லது மகளின் திருமணம் என்று பொருள் .
திருவளர்ச்செல்வன் /செல்வி எனும் போது திருமணம் நிகழவிருக்கும் எங்கள் மகன் /மகளுக்கு இளைய சகோதர சகோதரிகள் உள்ளனர் ,இது எங்கள் இல்லத்தின் முதல் திருமணம் என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது . உறவு முறைகள் மற்றும் ஊர் மக்கள் பெண் அல்லது மாப்பிள்ளைக்கு கேட்டு வரலாம் என்பதை குறிப்பால் உணர்த்தினார் இந்த தமிழ் வார்த்தைகளின் மூலம் .
திருநிறைச்செல்வன் /செல்வி எனும் போது திருமணம் நிகழவிருக்கும் எங்கள் மகன் /மகளுக்கு திருமணத்திற்கு பின் எங்கள் வீட்டில் வேறு குழந்தைகள் திருமணத்திற்கு இல்லை எனவே யாரும் பெண் கேட்டு அல்லது மாப்பிள்ளை கேட்டு வரவேண்டாம் என்று குறிப்பால் உணர்த்தினார் . எவ்வளவு அழகான தமிழ் மொழி ! எவ்வளவு அழகான ஆழமான பொருள் புதைப்பு , குறிப்புணர்வு .
நன்றி !