பள்ளிக்கூட நினைவலைகள்

பள்ளிக்கூட நினைவலைகள்

பள்ளிக்கூடத்துல நம்ம வாத்தியார் வீட்டுப்பாடம் எழுதாதவங்க எல்லாம் எந்திரிச்சு நில்லுங்கன்னு சொல்லுறப்ப அன்னைக்கு நான் வீட்டுக்கு பாடம் செய்யாம வந்து இருப்பேன்.

பசங்களும் சரி பொண்ணுங்களும் சரி உடனே எந்திரிக்க மாட்டாங்க. நான் முன்னாடி பெஞ்சுக்கும் பின்னாடி பெஞ்சுக்கும் நடுவில் உட்கார்ந்து திரும்பிப் பார்ப்பேன்.

முன்னாடியும் யாரும் எழுந்திருக்கல... பின்னாடியும் யாரும் எழுந்திருக்கல.... தன்னந்தனியா இன்னைக்கு அசிங்கப்பட போறான்டா சுரேஷ் அப்படின்னு ஸ்லோவா எந்திரிச்சு பின்னாடி திரும்பி பார்க்க ஸ்லோமோஷனில் பத்துபேர் எந்திரிச்சு நிப்பாங்க...

அப்படியே தலையை முன்னால திருப்புனா அங்கேயும் ஒரு நாலு பேரு. கொஞ்சம் சந்தோஷம்...

அப்படியே தலை சைடில் திரும்பும்போது அங்க கொஞ்சம் பொண்ணுங்களும் நிப்பாங்க எந்திரிச்சு வீட்டுப்பாடம் செய்யாத கேர்ள் கேங்க்ஸ்...
இப்ப மனசுக்குள் இரட்டிப்பு மகிழ்ச்சி...!

அடிபட்டாலும் அது ஒரு சந்தோஷம் அந்த மாதிரி நேரங்களில்...
அது அனுபவிச்சாதான் தெரியும்.

வாத்தியார் நமக்கு அடிக்கும்போது வாங்கிகிட்டு அடுத்தது மத்தவங்க எல்லாரும் அடிவாங்குறத வேடிக்கை பார்ப்போம். இந்த இடத்தில்தான் நம் நமது சிவாஜி அவர்களின் பாடலை அனுபவித்திருப்போம்...
"சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்"

அதுவும் பொண்ணுங்க அடி வாங்குறது பார்க்கிறப்ப இதே சிவாஜி பாட்டு ஏ ஆர் ரகுமான் மியூசிக் போட்டு கேட்டு ரசிச்சா எப்படி இருக்கும். நினைச்சுப் பார்க்க முடியுதா முடிஞ்சா அப்படி தான் எங்களுக்கு இருக்கும். இது ஒட்டுமொத்த ஆண் நண்பர்களுக்கும் சமர்ப்பணம்.

இதுல நம்ம நண்பன் இருந்தான்னா அவன் அடி வாங்குறது பாக்கும்போது சிரிப்பை அடக்க முடியாது.

இது மாதிரிதான் பள்ளிக்கூடத்துல எல்லா விஷயத்துலயும் பயந்து பயந்து
"ஆஹா இன்னைக்கு நம்ம மட்டும்தானா"
என்று ஒரு மைன்ட் வாய்ஸ் கடைசி வரைக்கும் எனக்கு இருந்தது.

ஆனா கடைசி வரைக்கும் "நானும் இருக்கேன் டா அப்படின்னு ஒரு நண்பர்கள் கூட்டம் இருக்கும்" அந்த நண்பர்கள் கூட்டம் நம்மை காப்பாற்றும் என்னைக்கும்.

கூட்டத்துல தனியா அடி வாங்குறது தெரியாமல் இருக்க கூட்டத்தோடு கூட்டமா அடிவாங்குவது ஒன்னும் அவ்வளவு அவமானமா நமக்கு தெரியாது.

ஆஹ....

அடுத்த வரிகளுக்கு புறப்படலாமே....

வீட்டுப்பாடம் எழுதி வராத கூட்டத்தில நம்ம நண்பன் மட்டும் தப்பிச்சி இருந்தான்னா செம்ம கோவம் வரும்.

ஏன்னா அங்கு ஒரு ப்ளாஷ்பேக் ஓப்பன் ஆகும் எனக்கு.

நான் வீட்டுப்பாடம் எழுத போறப்ப அதே நண்பன் என் வீட்டுக்கு வந்து என்னை விளையாட கூப்பிட்டுவான்.

"டேய் நான் வீட்டுப்பாடம் எழுதனும்டா நா வரலடா" அப்படின்னு சொன்னா.... அந்த நாயி சொல்லும்
"டேய் எதுக்கு இப்படி கஷ்டப்பட்டு எழுதுற...
நேத்து நீ வீட்டுப்பாடம் எழுதிட்டு போனியே நம்ம சாரு கேட்டாங்களா? இல்லல்ல...
நானும் நேத்து எழுதாம போயிருந்தேன். இன்னைக்கு கேட்டார்களா என்ன..? அதெல்லாம் கேக்க மாட்டாங்கடா வாடா" என்பான் நண்பன்.

என்னை கிட்டத்தட்ட பிரைன் வாஷ் பன்னி அவன் கூப்பிட எனக்குள் இருக்கும் தயக்கம் உடைக்க மேலும் பேசுவான்.

"நேத்து நீ கஷ்டப்பட்டு உட்காந்து எழுதினியே... இன்னைக்கு சாரு கேட்டாங்களா... கடைசில வேஸ்ட்டா போச்சா... நீயே சொல்லு... கிட்டத்தட்ட 40 பக்கம் எவ்வளவு கை வலிக்க எழுதி இருப்ப கேட்டாங்களா சொல்லு இல்லல்ல.... எனக்குத் தெரியும்டா அதான் நான் எழுதல." என்பான்.

நானும் கொஞ்சம் யோசித்து பதில் கூறுவேன்.

"டேய் அவர் ஏசுதாஸ் சாருடா...
அவருக்கு ஞாபக மறதி இருக்குடா...
அதனால் மறந்துருப்பாருடா.... நாளைக்கு சௌரியம்மாள் டீச்சர்....
அடி ஒன்னு ஒன்னும் இடிமாதிரி இருக்கும்... அறிவழகன கேட்டுப்பாரு தெரியும்"
என்பேன்.

நண்பன் உச்சகட்டமாக ஒரு கதறல் என்னை சாச்சி புடுவான் அந்த ஒற்றைக் கதறலில்....

"அடி வாங்குனா கூட ஓகே... ஆனா அறிவழகனை கேட்டு பாரு ன்னு சொன்னப் பாரு அதுதான் தப்பா இருக்குடா" என்பான்.

என்னடா இவன் புது கதை சொல்கிறான் என்றால் கூறுவான் நண்பன் கதறலை...

"அறிவழகன அடிச்சு டயர்ட் ஆக்குன வாத்தியார் ஆர் சி ஸ்கூல் ஹிஸ்டரிலயே கிடையாதுடா...
அவன அடிச்சி அடிச்சி டயர்ட் ஆகிப் போன வாத்தியாருங்க தான் அதிகம்.
அடி வாங்க அவன் கையை நீட்டுறப்ப இருக்கிற அதே டிகிரில அடிச்ச வாத்தியார் யாரும் கிடையாது.
குச்சியை தூக்கி அடிக்கிறப்ப வாத்தியாருக்கு தாண்டா கை சுளுக்கிப் போகும்.
ஏன்னா நம்ம அறிவு கையை நீட்டுன கோணத்துல குறி வச்சி அடிக்க அந்த கோணத்தையே மாத்தி தன் மேல பாயிற அடி வலியை அடிச்ச அந்த வாத்தியாருக்கே திருப்பி விடுவதுதான்டா அவன் ஸ்டைலே....."
மூச்சுமுட்ட நண்பன் முடிப்பான் நீண்ட வசனத்தை....

"டேய் தெரியாம சொல்லிட்டண்டா அறிவழகன் கேட்டுப்பாருங்க அப்படின்னு இதுக்கு எதுக்குடா இவ்வளவு பெரிய பஞ்ச் டயலாக் இப்போ உனக்கு என்னடா வேணும் நான் விளையாட வரணும் அவ்வளவு தானே வரண்டா வாடா போகலாம் ஆனால் தயவுசெய்து நரசிம்மா மாதிரி மறுபடியும் பஞ்ச் டயலாக் பேசி சாகடிக்காத... அறிவழகனுக்கு அடி வலிக்கல அப்படின்னா நமக்கும் வலிக்காம இருக்குமா என்ன... அவனுக்கு அடி வாங்குற கோணத்தை மாத்துற சக்தி இருக்கு. நமக்கு பெட்டிக் கடையில போய் அஞ்சு ரூபாய்க்கு சில்லறை கூட மாத்த தெரியாதுடா புரிஞ்சுக்கோ நண்பா" ஆதங்கத்தை முடிப்பேன் என்றவாறு.

அப்படி இப்படி என மழுப்பி என்னை விளையாட அழைச்சிக்கிட்டு போன அந்த நண்பன் அடுத்தநாள் கரெக்டா வீட்டுப்பாடம் எழுதி விட்டு வந்து உட்கார்ந்திருப்பேன் அடிவாங்காத லிஸ்ட்ல அப்ப வரும் பாருங்க கோவம்....

கோவம் மட்டும் தான் வரும் வேற ஒன்னும் பன்ன முடியாது.
மறுபடியும் அடுத்த வாரம் என்னை ஏமாத்திட்டு கூட்டிட்டு போய் விடுவான்

பள்ளிக்கூடம் நினைவலைகள் ஒவ்வொன்றும் மீண்டும் நம்மை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறது...

ஆனால் இப்பொழுது பள்ளிக்கு நமக்கு அட்மிஷன் கொடுத்தாலும் அறிவழகன் கோணம் மாற்றும் டெக்னிக்கை நான் கற்றுக் கொண்டு இருக்க வாய்ப்பில்லை என்பதை ஆசிரியர்கள் உணர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

90 களின் நினைவலைகள் ஒத்துப்போக வாய்ப்புண்டு நட்பூஸ்....😀😂😀😭😀😎

எழுதியவர் : மன்னை சுரேஷ் (9-Jan-21, 2:45 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 428

மேலே