இரண்டாம் லியோபோல்ட்
பெல்ஜியத்தின் பெரிய வன்மையரசன்
இங்கிலாந்து அரசுக்கு சொந்தக்காரன்
இவனின் குடும்பமே நீள் அரசக்குடும்பம்
இவன் காங்கோவை இலவசமாய் பெற்றானாம்
நாட்டையே நாய் போல் பரிசு பெறுவது
மேலை நாட்டினரின் கீழான குணமாகும்
காங்கோ ஆப்ரிக்காவில் செழிப்புப் பகுதி
பயின் (இரப்பர்) விற்பதே இங்குத் தொழில்
காங்கோவை பெற்ற லியோபோல்ட்
கடுமையான முறையில் பயினைப் பெற
கரடுமுரடாய் தண்டனைக் கொடுத்து பயமுறுத்தினான்
குறிப்பிட்ட அளவுபயின் சேர்க்காதோர் கரம் சிரம்
கணக்கில்லாமல் வெட்டப்பட்டு சுணக்கிடப்பட்டது
பெண்களும் பெண் பிள்ளைகளும் சிதைக்கப்பட்டனர்
ஆண்களுக்கு அவர்களின் மனைவி குழந்தைகளின்
உடல்கள் சமைக்கப்பட்டு உணவாய் பரிமாறப்பட்டது
உயிருள்ள பிணமாய் அனைவரும் அங்கு நடமாடினர்
இந்தியாவில் காங்கிரஸ் உருவான 1885ம் ஆண்டிலே
இவ்வாறான கொடுமை அங்குத் தொடங்கியது
1909 லே இக்கொடுமை முடிய இறந்தோர் 500000
புண்ணிய அரசன் லியோபோல்ட் - 2 1909ல் மாண்டார்
----- நன்னாடன்.