வண்ணம் -114

வண்ணம் : 114
* * * * * * * * * * * *
தாத்தந் தனனன தனதானா
தாத்தந் தனனன தனதானா
ஆற்றங் கரைதனி லமர்வோனே
ஆக்கந் தரவரு மெளியோனே
மாற்றங் களைவிதை புவிவாழ்வில்
வாக்கிங் கருளிட வருவாயே
ஏற்றங் கொடுகரி முகனேயெம்
ஏக்கங் களுமினி விலகாதோ
கூற்றன் வருமுன மெமையாள்வாய்
கூத்தன் மகனுனை மறவோமே !!
சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Jan-21, 10:39 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 7

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே