திருடன்
பூட்டியிருந்த கோயிலுக்குள் புகுந்த திருடன்
எட்டி எட்டி எப்படியோ சந்நிதானத்துக்குள் .....
இருட்டிலும் ஒளிதரும் அம்மனின் தங்கத்தாலி
அதுதான் அவனுடைய குறி .... இதுயென்ன
வெறும் கற்சிலையே என்றெண்ணி திருடன்
அம்மன் கழுத்து தாலிக் கயிற்றை
இதோ எடுக்க நெருங்க..... ஐயோ என்று
துடிதுடித்து கீழே விழுகிறான் அவன்
பார்வையில் இருட்டிலும் தெரிந்தது அந்த
கருநாகம் ..... நாகாத்தம்மா என்று இப்போது
கீழே விழுந்த திருடன் ஈனமாய் அலற ...
புரிந்துகொண்டான் அந்த கற்சிலையின் உள்ளே
பக்தர்களின் பக்தி சாந்நித்யமாய் இருப்பதை
இறக்கும் தருவாயில் அம்மா வென்றான்
முக்தி தந்தாள் அவனுக்கு தாயவள் .