உன் அசைவில்

மண்ணை முட்டிய விதை நீ என் காதலில்..... முதல் உணர்வு தந்தாய்,
புது உணர்வு தந்தாய்,
என் இதயப் பூவை மலரச் செய்தாய்,
கண்ணாலே எனைக் கவிபாட வைத்தாய்,
கையசைவால் எனைக் கட்டிப்போட்டாய்,
உடல் மொழியால் என் உணர்வைத் தூண்டிவிட்டாய்,
இனி, என்னென்ன செய்யப் போகிறாயோ! உன் பித்தனை.........

வேல் முனியசாமி.

எழுதியவர் : வேல் முனியசாமி (4-Feb-21, 8:18 am)
சேர்த்தது : வேல் முனியசாமி
Tanglish : un asaivil
பார்வை : 198

மேலே