பார்வையின் நீலத்தில் காதலோவியம் வரைந்தாள்
பூக்களில் மல்லிகை புன்னகையில் மலர்ந்தாள்
புன்னகையில் மல்லிகை அவளும் வந்ததால்
பாக்களில் மன்னன் நானும் வந்தேன்
பார்வையில் காதல் என்னவென்று சொன்னாள் !
அல்லது
பார்வையில் ஆயிரம் கவிதைகள் சொன்னாள்
அல்லது
பார்வையின் நீலத்தில் காதலோவியம் வரைந்தாள்
அல்லது
பார்த்துப் பார்த்து மெல்லச் சிரித்தாள்
அல்லது
பார்த்து நாணத்தில் கன்னம் சிவந்தாள்
---பார்வை உங்கள் சாய்ஸ் . பிடித்த கடைசிவரியை
இணைத்து படித்து ரசித்துக் கொள்ளுங்கள்
உங்கள் கற்பனை வரியை இணைத்தும் படித்துக்
கொள்ளுங்கள் NO OBJECTION கவிக்குயில்களே !