தமிழினக் கலக்கம்
தமிழினக் கலக்கம்
இலாவணி
1 வது பாடல்
எத்தனை எத்தனை எழுதினும் படியாது
பிறர்பேச்சைக் கேட்டுமே கெட்டாரு கெட்டாரு
எத்தருடை பேச்சினிலே ஏமார்ந்து ஏமார்ந்து
எதற்குமே உதவாது போனாரு போனாரு
2 வது பாடல்
எவருமே தமிழர் என்பரிங்கு பாவிகளாம்
வேலனையும் விட்டனரே மறைத்து மறைத்து
அவருமே பிறதெய்வம் அருகியும் தொழுவர்பின்
அவரின்முன் தெய்வம்விட்டார் மறந்து மறந்து
3.
தமிழ்நாட்டில் தமிழரில் லைத்திரா விடராம்
தமிழனா திராவிட னாஐயகோ ஐயகோ
அநியாயம் செய்தாட்சி யிலடிக்கி றார்கொள்ளை
அவர்நீடிப் பதுமெதற் கையகோ ஐயகோ
4
படுபாவி கள்நாட்டினில் தட்டிப்பறித் தார்பதவி
நடுநிலைத் தவறியாட் சிகெடுத்தார் கெடுத்தார்
விடுதலைக் குழைக்காத வீணர்கையில் ஆட்சியும்
விடுதலை நாயக்கன் நாட்டைக்கெடுத் தார்கெடுத்தார்
.....