கண்ணசைத்தால்

வண்ணம் குழைத்து,
வரைந்தெடுத்தேன். உன்
வனப்பான வடிவழகை.
எண்ணம் துளைத்து
இளைத்துவிட்டேன், உன்
வளமான மனதழகில்.

தேகம் முழுதும்
திளைக்கும் ஓவியமே,
தேனாக இனித்து
தித்திக்கும் காவியமே,
நினைவாலே மனதோடு
நின்றிருக்கும் நித்தியமே,
நித்தம் நித்தம் ஏங்கி என்
நித்திரை தொலைத்தவளே.

விழியோடு விழிவைத்து
விழிவழி மொழி பேசு.
விழிவழி வழியும் காதலை
வேல் விழியாளே நீ பேசு.

உன் கரம் சேர, கால் கடுக்க
நிற்கின்றேன்.
கண்ணசைத்தால் கடுகி நான்
வருகின்றேன்.

ச. தீபன்
9443551706

எழுதியவர் : தீபன் (14-Feb-21, 8:34 pm)
சேர்த்தது : Deepan
பார்வை : 196

மேலே