தேடல்
சாலை எங்கும் உலவும் என் கண்களின் முதல் தேடல் நீ..
உன்னைக் காணத பொழுதுகள் எல்லாம் என் உயிர் வாழாத பொழுதுகள்..
உன்னுள் தொலைந்த என்னை தேடும் போதேல்லாம் மீண்டும் தொலையும் நான்..
என் மன பிம்பத்தை நீ உடைத்தாலும் உடைதுண்டுகளிலும் தேடுகிறேன் உன் நினைவை..
தூரமாக்கும் ஒவ்வொரு இரவையும் தோற்கடிக்கிறேன் கனவில் உன்னை தேடி உன்னுடன் கூடி..
கண்மூடி உன்னை தேடும் நொடி தொலைகிறது நான் விரும்பும் நாணம் என்னும் ஆடை..
முடியாத இந்த தேடலின் தேடு பொருளாக உன்னை மட்டும் வேண்டும் என் "மனம்"..