மென் காதல் கொண்டாட

வண்டு நாய் எலி தும்பி மாடு மைனா கிளி
என்ற எல்லாத்துக்குள்ளும் உண்டு காதல் - இவைகள்
கூடிச் சென்று விரட்டிப் பிடித்து பலவந்தமாய்
காம வெறியில் மோகந்தீர்த்ததில்லை இதுவரை
காசைக்கொண்டு பேரம்பேசி போகங்கொள்வதில்லை
காமப்பித்தால் காதல் வெறிக் கொண்டு
காதலி முகத்தில் கடுந்திராவகம் வீசியதில்லை
காதலுக்கு என்று நேரத்தை கண்டபடி சிதைத்ததில்லை
காதலால் மனம்பிறழ்ந்து காலனுடன் கைக்கோர்த்ததில்லை
காவியத்தில் இடங்கொள்ள அவைகளும் எங்கும்
காதல் சின்னங்களையும் கட்டியதும் இல்லையே
கோளம் தோன்றியது முதலே ஆனதே உயிர் காதல்
கோட்பாடுகளை கடந்தே நிலைப்பெற்ற மென் காதல்
கொண்டாட நாள் ஒன்றை வைத்தவன் பெரியமூடனே.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (14-Feb-21, 7:56 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : men kaadhal KONTATA
பார்வை : 175

மேலே