பெண் பதுமை

வண்ண வண்ண வெண்ணிலவைக் கண்டேன்
வஞ்சியவள் வண்ணமுகம் அதில் கண்டேன்
கருத்த கார்மேகம் கண்டேன் அதில்
காரிகையின் குழல் கூந்தல் கண்டேன்
பொன்வேய்ந்த கோபுரம் கண்டேன் மங்கை
அவள் தேகத்தை அதில் கண்டேன்
சிவந்த தாமரை இதழ் கண்டேன்
சிவந்த அவள் அதரம் அதில்கண்டேன்
மூடிய மேலாடைக்குப் பின் மறைய பார்க்கும்
மங்கையின் அழகைக் கண்டேன் கலசம்போல
வெற்றிலைக் கொடி கண்டேன் அதில்
அவள் சிற்றிடைக் கண்டேன் சிவந்த
அவள் பாதாமிரண்டும் தடாகத்
தாமரைப் பூவாய்க் கண்டேன் நிமிர்ந்து
பார்க்கையில் ஒளிரும் அவள் விழிகள்
மின்னும் தாரகைபோல் இருக்க கண்டேன்

இவள் இயற்கை அழகு ததும்பும்
அழகுப் பதுமை உயிர்க்கொண்ட பெண்பதுமை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Feb-21, 1:11 pm)
Tanglish : pen pathumai
பார்வை : 173

மேலே