இனிய காலை வேளை

இனிய காலை வணக்கம் என்று
இசைப் பாடி தெரிவிக்கும் சோலைக்குயில்
மரத்திலிருந்து கரையும் காகங்கள் அங்கு
வீட்டின் கூரை மீதிலிருந்து கூவும்
சேவல் ஓமென்று மந்திரம் ஒலிக்கும்
நீலக் கடல் கிழக்கில் அங்கு
உதயமாகும் பகலவன் இனிதே நாள்
கழிய இவையெல்லாம் நமக்கு இயற்கை
அன்னையின் நித்திய ஆசிர்வாதம் ஆனால்
நாமோ இன்னும் துயிலிருந்து விழிக்க
மனமில்லாது விழித்தே உறக்கத்தில் மஞ்சத்தில்
அதி காலையில் எழுந்திட பழகனும்
அது தேவன் நம்மை வாழவைக்க பூமிக்கு
உலாவரும் நல்ல நேரம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-Feb-21, 9:30 am)
பார்வை : 133

மேலே