ஆகாய காற்று

காற்று ஒலித்த
காவிய சிந்தனையில்
கண்டெடுத்த மொத அழகி நீ !

பூ மலந்த
ஓசையை கைது செய்தேன்
தேவதை சொப்பனம்
கலையாமல் இருக்க !

பன்மை அர்த்த
மொவனம் பார்த்தேன்
உன் அத்தனை மௌன
சமயங்களில் !

மின்மினி வெளிச்ச
அழகில் ரசித்தேன்
உன் அழகை - மயங்கி
கிடக்கிறேன் இன்று வரை !

கண்டிராத காதலுக்கு
விளக்கம் கண்டேன்

உன் பெயர் மொழியிலோ ?
உன் சைகை மொழியிலோ ?
உன் கண்ணழகு மொழியிலோ ?
உன் மௌன மொழியிலோ ?

இல்லை இவைசேர
என்னை பின்னிய காதல் வலையிலா ?

எழுதியவர் : வேல்முருகானந்தன் சி (23-Feb-21, 12:52 pm)
Tanglish : aakaaya kaatru
பார்வை : 37

மேலே