காதல் தென்றலா இம்முத்தம்

தென்றலைப் பற்றி கவிதைகள்
ஆயிரம் ஆயிரம் உண்டு ஆயினும்
தென்றல் தரும் சுகமறிய
சுகம் கண்டவனைக் கேட்டுத்தான்
அறிந்திடலாம் அதுபோல
பார்வையால் மற்றும் கைபேசியால்
காதல் பரிமாற்றங்கள் இருந்தாலும்
அன்பே இன்று நீஎன்
கன்னத்தில் தந்த முத்தம்
தென்றலின் குளுமையைத் தந்ததே
காதல் தென்றலா இம்முத்தம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (26-Feb-21, 2:13 pm)
பார்வை : 114

மேலே