சல்லாபம் சங்கமம்

அலைபாய்ந்த அவள் கூந்தல்
அவள் சிவந்த கன்னங்களிலும்
பட்டுக் கலைய அவள் அழகு
மேலும் மெருகேற அவளின்
கனிந்த பார்வை காதலாய் ,

ஆசுவாசமாய் துடித்த அவன்
இதயத்தில் ஓர் மின்னல்
இடம் மாறிச் சென்றது போல்
உணர்வு ஓன்று மோதித்தான்
அவனில் மாற்றமொன்று அவனை
தடுமாற்றம் கொள்ள வைத்தது,
,
இருந்தும் அது என்ன சுகமோ /
இனிமையும் இளமையும்
மனசுக்குள் சல்லாபம், சங்கமம் ,
காதல் மெல்ல மெல்ல
எண்ண ஊற்றில் இதமாக,
சங்கமித்துக் கொண்டன,

எழுதியவர் : பாத்திமாமலர் (4-Mar-21, 12:34 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 166

மேலே