நீ துருவ நட்சத்திரம்

இளைஞனே! நீ
துருவ நட்சத்திரம்.
தடம் தவறிடும் - நம்
நாடெனுங்கப்பலுக்கு
ஒளி காட்டிடு.

பகைப்புயல்கள்...
போட்டியலைகள் நிறை
உலகப்பெருங்கடலில்
இக்கப்பலெம்மாத்திரம்...!
உறுதியாகக்கட்டப்பட்டிருப்பது
உண்மைதான் - எனினும்
அலட்சியமும் அறிவின்மையும்
அர்ப்பணமின்மையும் அதிகமதிகமே.

நன்மைதீமைப்
பாதைகள் நடுவே
திசைதெரியாக்
கப்பலோட்டிகள்...
இலட்சியக்கரையை
சூன்யமாய்க்காணும்
கவசமில்லா
பிரயாணிகள்...
தைரிய அமிர்தமூட்டி நீ
தடம் காட்டிடு.

துருவ நட்சத்திரத்துக்கும்
துன்பம் தலைவிதியே.
அநீதி மேகமுனை மூடும்;
அகங்காராயிருள் மறைக்கும்;
பொறாமைக்கிரகணங்கள்
பின்தங்க வைக்கும்...

கண்மூடிடாதே.
நீ அணைந்துபோனால்
இந்தக்கப்பல்
சிதைந்தும் போகலாம்.

எழுதியவர் : அமல்.சி.தேவ் (5-Mar-21, 3:15 pm)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 34

மேலே