இலட்சியம் இல்லை நம்மில்
காலப் புயலில் பஞ்சுகள்;
விதி அலையில் துருப்புகள்;
மாற்றமெனும் மந்திரவாதியின்
கைப்பொம்மைகள் நாம்.
மதிப்பீடுகளின் புரட்சிகளில்
நூலறுந்த பட்டங்கள்.
இலட்சியம் இல்லை நம்மில்.
சமுதாய நதியில்
எதிர் நீச்சலிடும்
சக்தியும் சித்தமுமில்லை.
வழியோரப் புற்களாய்
வாழ்ந்து மடிகிறோம்i.
விட்டில்களாய் சூன்ய
விளக்கை சுற்றுகிறோம்.
சொந்த வீட்டுக்கே
சில வேளைகளில்
அகதிகளாகிறோம்.