கண்ணா கண்ணா வருவாயா

கண்ணா கண்ணா உனக்காகவே உன்நினைவிலே
உன்னோடு உன்னுயிரோடு சேர்ந்திட துடிக்கும்
உந்தன் ராதை இங்கே நான்வாட கள்வனே
நீயோ ஒன்றும் அறியாதவன் போலவே
அங்கு யமுனைக் கரையோரம் புன்னைமரத்தடியில்
தேன் சிந்தும் உந்தன் செவ்விதழோரம்
வேய்ங்குழல் கொண்டு வருடி என்னைமறந்து
ருக்மணியுடன் ஆடு கின்றாய் குழல்
சேர்க்கும் ராகத்திற்கு நானொன்றும் இதை
அறியாதவள் அல்ல மாயனே ஒன்றறிநீ
எந்தன் காதலனே நீ இல்லாது
இங்கே நான் வாழ்வது உனக்காகவே
தேனொழுகும் உந்தன் அதரம் பட்டு
மோகன முரளிகானம் எழுப்பும் உந்தன்
குழலாய் நான் ஏன் பிறக்கவில்லையே என்று
ஏங்கி வாழ்கின்றேன்.... கண்ணா கண்ணா
வந்திடுவாய் இப்போதே இக்கணமே வந்து
உன்னுயிராய்க் காத்து கிடைக்கும் உந்தன்
ராதையை ஏற்றுக்கொள்ள உன்னுயிரோடு
கலந்திடவே மாயவனே கண்ணா ....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Mar-21, 9:36 pm)
பார்வை : 62

மேலே