மனைவி
மனைவி
நேரிசை ஆசிரியப்பா
நீரின் பஞ்சம் பயிரே காட்டும்
நிலத்தின் நிலையை விளைச்சல் விளக்கும்
படிப்பின் வலிமை பதவி காட்டும
பணத்தின் அருமை வறுமை காட்டும
தாய்க்கு பின்னே அன்பும் குறையும்
தந்தை காட்டும் அறிவின் முதிர்ச்சி
தம்பி மறைய தோள்வலி ஏது
மகனும் மறைய நேசம் காட்டார்
மகளும் போக பாசம் அறும்
நட்பு போக நகரா பொழுதும்
உறவு போக தனியாய் போவாய்
மனைவி போக எல்லாம் போகும்
உலகில் வேண்டுமா உலவல்
இருந்து என்ன இறத்தல் மேலாமே
...