இயற்கைச் சட்டம்

இரைதேடிய கொக்குக்குக் கிடைத்தது உணவு
இரையான மீனுக்குத் தகர்ந்தது கனவு,
காத்திருக்கும் உணவுக்காக மீனின் குஞ்சுகள்
காலம் கடந்துவிட்ட நிலையறியாப் பிஞ்சுகள்..

நீர்வாழ் உயிர்களிலும் உளதோ இனப்பகை
நீள்கிறதே இனக்கொலையில் மனிதர் போல,
யார்போட்ட சட்டமிதோ தெரிய வில்லை
என்றென்றும் தொடர்வதுதான் இயற்கைச் சட்டமோ...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (14-Mar-21, 4:17 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 162

மேலே