நீர்நிலைகளின் பெயர்களும் அவற்றின் பயன்களும் --

தமிழ் கூறும் நல்லுலகில் நீர்நிலைகளுக்கு அவற்றின் பயப்பாட்டிற்கு ஏற்றாற்போல் பெயர்கள் வழக்கப்பட்டிருந்தன என்ற விபரங்கள் நம்மில் எத்துனைப் பேருக்குத் தெரியும் ? விபரங்களுக்கு கீழே தொடர்ந்து படியுங்கள் .

ஏரி --irrigation tank ; வேளாண்மை செய்ய ஏற்படுத்தப்பட்ட நீர்த்த தேக்கம் .

குளம் --Bathing tank --ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்க பயன்படும் நீர்நிலை

நடை கேணி --Large with steps on one side -- இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு

சேங்கை --Tank with duck weed --பாசிக்கொடி மண்டிய குளம் .

கால் --channel --நீரோடும் வழி

பிள்ளைக்கிணறு ---well in middle of a Tank --குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு

பொங்கு கிணறு --well with bubbling spiring --ஊற்றுக்கால்கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு .

சுனை --mountain pool --மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை .

மதகு --sluice with many venturese --பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை .அடைப்பும் திருப்பும் உள்ளது .

குட்டை --small pond --சிறிய குட்டம். மாடு முதலியன குளிப்பாட்டும் நீர் நிலை .

பொய்கை -- lake --தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்க்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை

குண்டு -- pool --குளிப்பதற்கேற்ற ஒரு சிறிய குளம் .

கலிங்கு ---sluice with many venturse --ஏரி முதலில் பாசன நீர்த்த தேக்கம் உடைப்பெடுக்காமல் இருபதெற்க்கு முன்னெச்செரிக்கையாக கற்களால் உருகியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்துதிறக்கக்கூடியதாக உள்ள நீர் தேக்கம் .

குமிழி ஊற்று -- artesian fountain --அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரம் ஊற்று .

குமிழி -- rock cut well --நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு .

கால்வாய் --supply channel to a Tank --ஏரி, குளம் ஊரணி இவற்றிற்கு நீர் ஊட்டும் வழி .

ஆழிக்கிணறு --well in seashore --கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு .

அருவி --water falls from top of the hills -- மலை முகத்தில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது

சுட்டும் கிணறு-- dwell in well --விளை நிலத்தில் வெட்டி கல், செங்கற்கள் கொண்டு சுவர் கட்டிய கிணறு .

தெப்பக்குளம் -- temple Tank with inside pathway along parapet wall --ஆளோடியுடன் கூடிய , தெப்பம் சுற்றி வரும் குளம் .

அகழி --moat --கூடையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண் .

மறு கால் -- surplus water channel -- அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால் .

குட்டம் --large pond --பெருங் குட்டை .

ஊற்று-- spring -- பூமிக்கடியிலிருந்து நீர் ஊற்றுவது

கால்வாய் -- கம்மாய்--irrigation Tank --பாண்டிய நாட்டில் ஏரிக்கு வழங்க்கும் பெயர் .

திருக்குளம் --temple Tank ---கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம் .

தாங்கல்--irrigation Tank --இப்பெயர் தொண்டை மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும் .

கேணி -- large well -- அகலமும் ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு ..

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (20-Mar-21, 4:43 pm)
பார்வை : 1116

மேலே