அப்பமாய் உப்பிய கன்னம்

ஒழுகிசை அகவல் ஓசை உடைய
இணைக்குறள் ஆசிரியப்பா

மதுவால் மயங்கும் மனமாய் பெரியதாய்
எழிலில் சிலையென அருகில்
நிற்கும் உன்னின் அழகில்
மயங்கியே நானும் அதிர்வில்
பார்த்தேன் உன்னிரு கண்ணை
பெண்ணே நீயோ பொன்னாய்
அப்பமாய் உப்பிய கன்னம்
அதிலோர் செந்நிற மச்சம்
மேநிலை அழகில் மூக்கு
மதுளை மணியென பற்கள்
அந்தியின் கதிர் வானின் உதடுகள்
பளிரென மெய்நிறம்
பரவசம் பொங்கும் சிரிப்பு
அழகியே அழகாய் வாழ்வேன் அணைத்தே
¬¬¬¬¬¬¬¬¬ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (30-Mar-21, 11:27 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 72

மேலே