நீயே அழகு தேவதை

மயங்காதார் பாவிகள்


நேரிசை ஆசிரியப்பா

வெண்நிலா வரும்விசும் பினில் தாரகை
ஒன்றாய் கூடினு மாகா வெண்ணிலா
ஊரழ கெல்லாம் உன்னழ கைமிஞ்ச
யாருளர் அழகியின் இடையழ கிருக்கப்
பாரு கண்ணழ கிருக்கா இருக்கும்
மார்புமே இருக்கா இடுப்பும் வாழைபோல்
வழுக்கும் தொடையா முனக்கும் பிறர்கு
அத்தொடை யிருப்பின் இல்லை பாரு
சங்குடை கழுத்தும் அவர்க்கு உனதுபோல்
கடைந்த கால்விரல் இருக்க இல்லை
நீள்வெண் டைப்பிஞ் சுவிரல் கையில்
செதுக்கிய செப்புப் பின்புறம் இருக்க
இல்லை கோட்டில் மூக்கும் பாலின்
வெண்மைத் தேகம் சிலர்க்குண் டாம்பார்
வெண்மை முத்துப் பல்லிருக் காபார்
ஒயிலாய் காண்பர் பார்க்க ஒப்பார்
கண்ணே யுன்போல் எவரையும்
கண்ட தில்லை அழகில் தானே


ஒழுகிசை அகவல் ஓசை உடைய நேரிசை ஆசிரியப்பா

நின்மை தீட்டா சிலைவளைப் புருவம்
விரிமட லொழுங்குக் காதும் மடலும்
பிறைமா டநெற்றி நீண்டுதொங் குசாரை
பின்னலின் கருப்பும் கைக்கடங் குகொங்கை
மருளும் மான்விழி சங்குத் தொப்புள்
சுழிவயிர் வளைவீழ் நீள்கை
சொத்தாய் மொத்தவ ழகின்கிடங் கும்நீயே

எழுதியவர் : பழனி ராஜன் (15-Apr-21, 7:32 pm)
பார்வை : 289

மேலே