பலாப்பழம்

நாம் வாழும் இம்மண்ணே நிலையில்லை
நாம் பின்னே தேடி அலைவது எது
தெரியாது காமத்தின் பிடியில் கட்டுண்டு
தலைத் தெறிக்க மதம்கொண்டு அலையும் நாம்
கொஞ்சம் 'அவனை' நினைத்தாலே போதுமே
நிலமைத் தெளிவாக நாம் யாரென்பதும்
மெல்ல மெல்ல புரிய -எப்படி பலாவின்
கடினமான மேல்தோல் நீக்க உள்ளே
சுவைத்திட நாம் காணும் பலாப்பழம்போல

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Apr-21, 7:10 pm)
பார்வை : 36

மேலே