நன்றிகள் பல

இக்கவி எழுத வேண்டும், என்று
முன் யோசனையில்லை,

முன் ஏற்பாடுமில்லை,
தலைப்புகளும் இல்லை,

எழுத தொடங்கும் முன்,
எழுதுகிற இடத்தில் இருந்து,

புலம்பெயர்ந்து விடுகிறேன்,
சுவற்றில் தள்ளாடும் தட்டான் போல,

யதேச்சியாக எழுதும் கவிஞர்களில்,
ஏதாச்சும் எழுதுபவன் நான்.

நான் கிறுக்கிய வரிகளில்,
பிடித்தோர் பாராட்டுவர்,

பிடியாதோர் ஏசுவர், இவை
இரண்டை தவிர வேறில்லை,

வரிகளை எழுதி வலைதளங்களில்,
இட்டுவிட்டு , விட்டு விடுகிறேன்,

அதை காண்போர் யார் என்றும்,
பார்பதில்லை, நினைப்பதுமில்லை,

கிறுக்கு பிடித்தவனின், கிறுக்கிய
வரிகளை, இன்று யதேச்சியாக,

தங்களின் கிறுக்கள் அருமை என்று
ஓராசிரியரின் வாய்மொழியில்,

வலம் வந்ததால்,
சற்று சிந்திக்கிறேன் .............

வாய் மொழியில் கூறுவது விட
வரிகளில் சித்தரிக்கிறேன்............

நன்றி கலந்த வணக்கம்.............
நாளும் நட்புடன் என்றும்
வெள்ளூர் வை க சாமி

எழுதியவர் : வெள்ளூர் வை க சாமி (27-Apr-21, 6:32 pm)
சேர்த்தது : வெள்ளூர் வை க சாமி
Tanglish : nanRikaL pala
பார்வை : 429

மேலே