நம்பிக்கை
நம்பிக்கை வாழ்வின் ஆதாரம்
நம்பினோரை கைவிட்டதில்லை எக்கடவுளும்
அன்றாடங் காய்ச்சிக்கு நம்பிக்கை
அடுத்த வேளை உணவு
பெற்றெடுத்த அன்னையின் நம்பிக்கை
பெற்ற மக்கள் பேரெடுப்பர்
கற்பிக்கும் ஆசிரியரின் நம்பிக்கை
குற்றமில்லா குடிமகனை படைப்பது
ராணுவ வீரனின் மனநம்பிக்கை
ரணபூமியில் வெற்றிக்கொடி நாட்டுவது
ஓட்டளிக்கும் குடிமகனின் நம்பிக்கை
ஒளிமயமான நல்லாட்சி அமைவது
மனமே நம்பிக்கை இழக்காதே
மடியுமிந்த கரோனா கிருமியும்