தொற்றுக்குச் சொல்லிடு பை பை

பற்றுக பற்றற்றான் தாளை உலகினில்
தொற்றுதொடா மல்வாழ வே

தொற்றுகாற் றில்பரவி அச்சுறுத்து கின்றது
முற்றும்தூய் மையைகைக் கொள்

மூச்சின் வழிகேடு செய்திடும் தொற்றை
முகமூடி யால்நீ விரட்டு

காக்கும் முகக்கவசம் கைசுத்தம் சாலநன்று
தொற்றுக்குச் சொல்லிடுபை பை

மானிடம் கொல்லும் கிருமி யிடமிருந்து
மாதவன்காக் கட்டும்நம் மை

எழுதியவர் : கவின் சாரலன் (5-May-21, 10:57 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 61

மேலே