கிருமியின் முடிவுக்கான தீர்வு மருந்து - ரெம்டெசிவிர் remdesivir - remedies desinenceVirus

கிருமியின் முடிவுக்கான தீர்வு மருந்து - (ரெம்டெசிவிர்)
remdesivir - rem(edies) desi(nence)Vir(us)

நேரிசை ஆசிரியப்பா

கள்ளச் சந்தையில் அதிகமாய் எளிதில்
அரசின் கொள்முதல் மட்டுமே உள்ளதில்
கிருமியின் முடிவைத் தீர்க்கும் மருந்து
எப்படி விற்கப் படுகிறதோ வெளியில்
அரசின் விற்பனை இடங்களில் கூட்டம்
மாபெரும் வகையில் கூடியே இருக்கையில்
மருந்து கிடைப்பது புரவியின் கொம்பாய்
உயிரின் பயத்தில் அலையும் மக்களை
பணத்தைக் கொண்டே வாங்கத் தூண்டும்
பரிவு மிகுந்த கொள்ளையர் செய்கையே
மருந்து கிடைக்க வழிவகை செய்திட
அரசோ என்றும் போலவே ஊமையாய்
உயிரில் வேண்டாம் சந்தை
கிருமியை விடவே மனிதன் கேடாய்.
-----நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (15-May-21, 12:00 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 13

மேலே