மாறாமல் மாற்றுபவை

நிலைமண்டில ஆசிரியப்பா

உண்மை இன்மை பொய்மை ஆகுமோ
இன்மை என்பது மறைப்பு ஆகுமோ
பொய்மை உரைத்தல் உயிரைக் காத்தால்
பொய்மையே புனிதமாம் யாவரும் உணர்விரே. --1

அமைதி காத்தல் கோழை ஆகுமோ
கோழை நிலையது மனதைச் சார்ந்ததோ
மனதின் கோபம் அழிவை காத்தால்
கோழை எண்ணமே புனிதமாம் உணர்விரே. --2

வீரமும் தாழ்மையும் விவேகி இடத்திலே
விவேகம் என்பது வீரரின் உச்சம்
வெல்லும் எண்ணமே இருக்கும் வீரரிடம்
விவேகி மட்டுமே வீரராம் உணர்விரே. --- 3

பொய்யும் புரட்டும் உலகில் சட்டமாய்
சட்டமே அரசினை இயக்கும் ஊர்தியாய்
ஊர்தியும் செல்வது சிந்திப் போரினால்
சிந்திப் பவர்கள் என்போர் தீரரே. --- 4
-----நன்னாடன்.

(நன்னாடன் என்னும் நான் மரபு வழிக் கவிதைகளை இலக்கண மரபுடன் எழுதி இரண்டு முதல் ஐந்து அடுக்காக இந்த தளத்தில் பதிவிடுவேன், நான் குறிப்பிடும் பா என்பது அனைத்து அடுக்கிற்கும் உள்ள பொதுவான பா ஆகும். இலக்கண மரபுக்குட்பட்ட சீர் மற்றும் அடிகளுக்குள் புனையப்பட்டதே ஆகும்)

எழுதியவர் : நன்னாடன் (16-May-21, 4:06 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 46

மேலே