ஒரு குழந்தை வேங்கையாகியது

அன்னை மொழி அமுது
அவள் சொன்ன மொழி தமிழு
நான் மண்ணில் வந்த பொழுது
ஈழம் பற்றி எரிது
குண்டு சத்தம் கேட்கையிலே
அவலம் கலந்த குரலோடு
அம்மா அம்மா என்று
அலறும் சத்தம் என்காதினில்
ஒலித்த மொழி அம்மா
பூமியை நான் பார்க்கையிலே
அதுவே என்னது முதல் வார்த்தை
தாய் கொடுத்த அன்பும்
தந்தை கொடுத்த அறிவும்
வேங்கை மண்ணில்
பிறந்ததனால்
வீறுகொண்டு எழுந்து நின்று
வேங்கையாக மாறிவிட்டேன்

எழுதியவர் : கவிதாசன் (21-May-21, 1:04 am)
சேர்த்தது : kavithasan
பார்வை : 65

மேலே