ஊரடங்கு அரண் அரனே
அன்புமனம் கொண்டு
ஆகாரம் யாது தந்தாலும்
இச்சுவையே பெரிதென
ஈசன் இணங்குவானே...
உளப்பற்று கொண்டு
ஊரடங்கு காலத்திலும்
எந்தை அவனடிதொழ
ஏற்றம்தரும் மாற்றம்வரும்
ஐயமின்றி ஈசனடிபற்றிட
ஒறுத்தல் இலாவாழ்வு
ஒங்காரனும் அருளுவான்
ஒளடதம் இதுவே சஞ்சலமனதுக்கு.
(அரண்- பாதுகாப்பு
அரன்- சிவன்
எந்தை- எம்+தந்தை
ஒறுத்தல்-- தண்டித்தல்
ஓங்காரன்-- ஓம்+ காரன்
ஒளடதம் -- மருந்து)