MASKED MANGO MAN

முகமூடி அணிந்த மாம்பழக்காரன்
வீதி வழியே நடக்கிறான்
அவன் கூடை நிரம்ப
மஞ்சளும் பச்சையுமாய் மாம்பழங்கள் சிரித்தன
கூப்பிட நினைக்கும் போது
மூலையில் திரும்பி விரைந்து
நடந்து கொண்டிருந்தான் மாம்பழக்காரன் !

மஞ்சளும் பச்சையும் சிவப்புமாய் மாங்கனிகள்
சொன்னது GOOD BYE
LUCK NEXT TIME என்றன !

வீதி வழியே வந்த கன்னத்து மாம்பழக்காரியும்
ஏனோ சிரித்தாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (21-May-21, 10:01 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 119

மேலே