தேடும் விழிகள் அங்குமிங்கும் எனைத்தேடுது

பாடும் பறவை விடியலுக்குக் காத்திருக்குது
ஆடும் மலர்கள்தென் றல்வரக் காத்திருக்குது
ஓடும் நதியலைகள் நீநீராட உன்னிரு
தேடும் விழிகள் அங்குமிங்கும் எனைத்தேடுது

----இது கலிவிருத்தம்

பாடும் பறவை விடியலுக்குக் காத்திருக்க
ஆடும் மலர்கள்தென் றல்வரக் காத்திருக்க
ஓடும் நதியலைநீ நீராட அங்குமிங்கும்
தேடுதுன் கண்கள்என் னை !

---இது ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

பாடும் பறவை விடியலுக்குக் காத்திருக்க
ஆடும் மலர்கள்தென் றல்வர - ஓடிடும்
பாடும் நதியலைநீ நீராட அங்குமிங்கும்
தேடுமுன் கண்கள்என் னை !

--இது ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய ஒரு விகற்ப நேரிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (22-May-21, 10:28 am)
பார்வை : 107

மேலே