காய்ச்சுக் கஞ்சி - கலி விருத்தம்
கலி விருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு
சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று
ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
கஞ்சி யன்னத்திற் காயம் பருத்திடு
மஞ்சி வெப்ப மகலுஞ்சி லேஷ்மமோ
விஞ்சி யற்றிடு மேனி மினுத்திடும்
பஞ்சி போலப் பறந்திடும் பித்தமே 1383
- பதார்த்த குண சிந்தாமணி
வடித்த கஞ்சியும் சோறுமுண்டால் உடல் பருக்கும். ஒளி பெறும். கபம் உண்டாகும். வெப்பம், பித்தம் இவை நீங்கும்.