ஒருநாழிகை உறவும் உயிர் பெற்ற சிசுவும்

ஒருநாழிகை உறவும்
உயிர் பெற்ற சிசுவும்
ஒருநாழிகை உறவில்
உயிர்ப் பெற்ற அணுவும்,
ஒருநாள் உயிரெத்து,
ஓராயிம் விந்துகள் விரட்ட,
அன்னயின் அண்டத்தை,
அடைந்து இரண்டினுள்,
ஒன்றாய் கலந்து,
முதலாம் மாதமாய்
பிறப்பும் எடுத்து,
ஒன்றாய் வளர்ந்து,
இரண்டாம் மாதம்,
இருபிரிவாய் தரித்து
மூன்றாம் மாதம்,
முப்பரிமானம் பெற்று
நாளாம் மாதம்,
நாளொரு மேனியாய் உருவெடுத்து
நாளும் பொழுதும்
மசக்கையிட வைத்து
ஐந்தாம் மாதம்,
அள்ளியே தின்ன வைத்தும்
அசையவைத்தாய்.
ஆறாம் மாதம் அடிவயிறு விரித்து,
ஆடவும் துவங்கி விட்டாய்.
அவளை அடிவயிறு பிடிக்கவும் வைத்தாய்.
ஏழாம் மாதம் எடுத்ததடி வைத்து
அன்னையை துடியாய் துடிக்க வைத்தாய்.
உறுப்புக்கும் வடிவம் பெற்றாய்
எட்டாம் மாதம் எட்டியும் உதைத்தாய்.

ஏறியும் இறங்கியும் தவித்தாய்,
ஒன்பதாம் மாதம் ஒருக்களித்துப்படுத்து
ஒராயிரம் கனவுகளையும்
காணவைத்தாய்.
ஒன்பதாம் மாதம் ஓடிவரத்தவித்தாய்,

உயிர்பாதையில் உன்தலையைத் திருப்பி
பத்தாம் மாதம்
பாடாய் படுத்தி
பாவையவளையும் வருத்தி
பற்றிய உலகில்
பாவியவள் துடிக்க
உதரம் அறுத்து
வலியையும் கொடுத்து
வெளிஒளிக்கான முயன்றாய்.
ஒலி ஒளிஉலகிலும்
எட்டெடுத்து விட்டாய்
வந்தும் விழுந்து
வம்ச விளக்கை ஏற்றிவிட்டாய்.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (13-Jun-21, 6:01 pm)
பார்வை : 23

மேலே