காணிக்காரன்
இயற்கை வரைந்த ஓவியம்
கானகம்..!
கானகம்
ஈன்றெடுத்த
தலைமகன்
காணிக்காரன்..!
காடுகளின்
காவலன்..!
மலைமகளின்
முதல் மகன்..!
விலங்குகளின்
உறவுக்காரன்..!
இயற்கையின்
இரத்தமும்
சதையுமானவன்..!
நவீன
மனிதர்களின்
நாகரீகமற்றவன்..!
காணிக்காரன்
மண்ணுக்கு சொந்தக்காரன்..!