இரத்ததானம்

உதிரம் தந்து,
உயிர் கொடுப்பது,
அன்னை மட்டுமல்ல;
உதிரக் கொடையாளனும்தான்!

அலைபேசியது ஒலிக்கும்;
அபய குரலில்,
உதவியென கேட்டவுடன்,
ஆறுதல் வார்த்தை கூறி,
விரைந்து சென்றிடுவோம்!

ஊசியது உடலை துளைத்தாலும்,
உதவிடும் மனப்பான்மை,
உள்ளம் முழுவதும் நிறைந்திருக்கும்!

பிளாஸ்மாவாய்,
பிளேட்லேட்களாய்-சிவப்பு
இரத்த அனுக்களாய்,
தன்னலமின்றி,
தன்னார்வலனாய்,
கைமாறு கருதாது,
தானமாக வழங்கிடுவோம்!
கண்ணீரை துடைத்திடுவோம்!

உதிரம் கொடுத்திடுவோம்!
உயிரை காத்திடுவோம்!

எழுதியவர் : மா செந்தில் லோகு (15-Jun-21, 1:11 pm)
சேர்த்தது : செந்தில் லோகு
பார்வை : 94

மேலே