மௌனத்திற்கு அர்த்தம் கேட்டேன் உன்னிடம்

மௌனத்திற்கு அர்த்தம் கேட்டேன் மாலையிடம்
மௌனத்தில் விடைபெற்றுச் சென்றது மாலை
மௌனத்திற்கு அர்த்தம் கேட்டேன் காலையிடம்
மௌனமாய் மழுப்பிச் சென்றது காலை
மௌனத்திற்கு அர்த்தம் கேட்டேன் உன்னிடம்
மௌனத்தை மௌனமாய் போதித்தாய் மகாஞானிபோல்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jun-21, 9:14 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே