எலுமிச்சம் பழம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தாகங் குநகநோய் தாழாச் சிலிபதநோய்
வேகங்கொள் உன்மாதம் வீறுபீத்தம் - மாகண்ணோய்
கன்னநோய் வாந்தியும்போங் கட்டுவா தித்தொழிலில்
மன்னெலுமிச் சங்கனியை வாழ்த்து

- பதார்த்த குண சிந்தாமணி

இதனால் தாகம், நகச்சுற்று, யானைக்கால், உள்மாந்தம் பித்தம், கண்ணோய், காதுவலி, வாந்தி நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jun-21, 8:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே