பனிநீர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பனிச்சலத்தை யெல்லுதயம் பானஞ்செய் வாரைத்
தனிச்சொறிசி ரங்குகுட்டந் தாபந் - தொனிக்கயங்கால்
முத்தோஷம் நீரிழிவு மூடழல்கி ராணியிவை
கொத்தோடு தாழ்ந்தகலுங் கூறு

- பதார்த்த குண சிந்தாமணி

சூரியன் தோன்றும் வேளையில் பனிநீரை அருந்தினால் சொறி, சிரங்கு, குட்டம், தாகம், காசம், கிராணி, தனிவாதம், திரிதோஷம், உடல்வறட்சி, நீரிழிவு போன்றவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Jun-21, 12:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே