கவி சக்கரவர்த்தி

" கண்ணதாசன் "



" கண்ணன் பிறந்தான்! முத்து
கண்ணன் பிறந்தான்!
பல கவிதைகள் பிறந்ததம்மா !

மன்னன் பிறந்தான்! கவி
மன்னன் பிறந்தான்!
மன கவலைகள் பறந்ததம்மா !

' தேன், தேன்' என எழுத்துக்கள் சொறிந்து,
'பால், பால்' என வார்த்தைகளை தெளித்து,
'காய், காய்' என சொற்களால் வர்ணித்து,

எமக்காய் அழகு கவிதைகள் வடித்தாய்,
ரசிகர்கள் மனந்தனை படித்தாய்,

' நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை ' என உரைத்தாய்!
ஆனால் ,
'மனிதனும் தெய்வமாகலாம்'
எனக்கூறி நகைத்தாய் !

அரும் பெரும் கருத்துக்களை
எல்லாம் படைத்தாய்,
எம் இதய மேடையிலே தனி இடம் பிடித்தாய்.

' கண்ணனுக்கு தாசன் ' ஆனாய்,
எம்மை அந்த ' தாசனுக்கு தாசன் ' ஆக்கினாய்

' குழல் ' ஊதி மயக்கினான் அந்த கண்ணன்
' அழகு கவி எழுதி' மயக்கினான் இந்த முத்து கண்ணன்.

' உயர்ந்த கீதையை ' அளித்தான் அக்கண்னன்,
' சிறந்த கவிதையை' அளித்தான்
இந்த கண்னன்.

' கவி தமிழ் ' நீ செய்த அரும் சாதனை!
நீ எம்மிடையே இல்லையென்பதே
பெரும் சோதனை !

ஆனால் என்ன?

' நீ நிரந்தரமானவன் அழிவதில்லை ' !
' உள்ளத்தில் நல்ல உள்ளம் என்றும் உறங்குவதில்லை '!

'கவிதை பிறக்கும் இடமெல்லாம் நீ 'பிறப்பாய் '.
கவிதை சிறக்கும் நிலமெல்லாம் நீ 'சிரிப்பாய். "

எழுதியவர் : (25-Jun-21, 12:42 pm)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 674

மேலே