நேரம் நெருங்கி வருகிறது

நல்ல நேரம் வருவதால் –நம்ம
நாடு செழுத்து வளருமே.
பொல்லாத கூட்ட மெல்லாம் –இங்கே
புழுதி ஆகிப் போகுமே !

பட்ட துன்பம் எல்லாம் –இங்கு
பறந்து பறந்து போகுமே.
கெட்டுப் போன பாலும் –இங்கு
குடிக்கும் பாலாய் மாறுமே !

வளங்கள் இங்கு பெருகுமே –மக்கள்
நெஞ்ச மெல்லாம் நிறையுமே
நிழலைப் போன்ற வறுமையும் –இங்கு
நில்லா தொழிந்து போகுமே !

தொற்று நோயை அழித்திட –மக்கள்
தூய்மை வாழ்வைப் போற்றுமே
வெற்றுப் பேச்சு இல்லாமல் –தனி
வீர நடையும் போடுமே !

காடு வளர்த்து வைத்திட –கனக்
கார்மழையும் பொழியுமே !
தேடும் பொருட்கள் யாவுமே –நம்ம
வீடு நிறைந்து நிற்குமே !

நல்ல அரசும் தோன்றுமே –மக்கள்
நலத்தைப் பேணி நிற்குமே
கல்வி தன்னை வளர்க்குமே –மக்கள்
வாழ்க்கைத் தரம் உயர்த்துமே !

நல்ல காலம் பிறந்திட –நேரம்
நெருங்கி நெருங்கி வருகுதே
தொல்லை தொலைந்து போகுமே –மக்கள்
துன்ப மெல்லாம் பறக்குமே! *****24-03-2021 ******

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (26-Jun-21, 11:33 am)
பார்வை : 63

மேலே