பொம்மைக் கல்யாணம்

கொடிது கொடிது
இளமையில் வறுமை கொடிது
அவ்வறுமையின் நடுவில்
குடும்பச் சுமையில்
ஆணாதிக்கச் சமூகத்தின் இடையில்
அவளும் கிளம்பினாள் வேளைச் செய்ய ..

துளிர்விடும் ஆசைகள்
மனம்நிறைய கனவுகள்
காதலின் எதிர்ப்பார்ப்புகள்
அக்னிச் சாட்சியாய் நடந்த அவள் திருமணம்
ஒரு பொம்மைக் கல்யாணமே..

வீட்டை மாற்றினார்கள்
உறவைக் கூட்டினார்கள்
பெயரை மாற்றினார்கள்- புதிய
பழக்கவழக்கத்தைப் புகட்டினார்கள்
அவளின் பொம்மைக் கல்யாணித்திற்காக ..

பல இடையூறுகளைக் கடந்தாள்
பற்பல பழிச்சொற்களை ஏற்றாள்
பலச் சந்தர்பங்களில் மௌனம் சாதித்தாள்
எல்லாம் துணைவனுக்காகவே யென்றிருந்தாள்
பொம்மைக் கல்யாணத்தின் போதையில் ..

எல்லாம் மாற்றியும் -ஏனோ அவர்களால்
அவளது விதியை மாற்ற இயலவில்லை
அதே அவப்பெயர் , அவமானம் , அசிங்கம் - அவளின்
மிஞ்சிய நாட்களுக்குக் கிடைத்தப் பெயர் - வாழாவெட்டி ..
பொம்மைக் கல்யாணித்தின் பரிசு ..

வினாக்களுக்கு விடையாய் அல்லாமல்
சங்கடங்களுக்கு ஆறுதலாய் இல்லாமல்
தோள் கொடுக்கும் தோழனாய் நில்லாமல்
தேள்ப் போல் அவளைக் கொட்டித் தீர்த்தான்
பொம்மைக் கல்யாணத்தின் இறுதி 1௦ நிமிடம் ..

அவளது மனம் கெஞ்சியது , புலம்பியது , வெம்பியது
ஒரு கணம் கடவுள் கீழிறங்கி வரமாட்டாரோவென்று
நீ என் வாழ்க்கைக்குத் தகுதியற்றவள் என்ற
சொல்லுக்குப் பின்னும்
எவ்வொறுப் பெண்ணும் நிர்ப்பாளோ அவ்வீட்டில்
பொம்மைக் கல்யாணம் முடிவுற்றது..

கண்ணீரும் காலியாகிவிட்டது
வார்த்தைகளும் வற்றிவிட்டது
ஆசைகள் ஆபத்தானது - இறுதியில்
மௌனம் மட்டுமே சாட்சியானது
இந்த பொம்மைக் கல்யாணத்தில்..

வேண்டியதும் கிடைக்கவில்லை
கிடைத்ததும் நிலைக்கவில்லை
எஞ்சியது ஏமாற்றமே - இனி
துணிச்சல் ஒன்றே அவள் துணை
பொம்மைக் கல்யாணம் கவிதையானது ..

எழுதியவர் : Anjali krishnan (26-Jun-21, 1:06 pm)
சேர்த்தது : Kamalanayanam
பார்வை : 35

மேலே