கடல் மஞ்சனையில் காதல்

நீலவண்ண பட்டுச்சேலையும் நளினம்கொளும் நீளமாய்
நீஉடுத்தி வருகையிலே... நின்அழகை கண்டே நில்லாதடி யென்மனம் என்னிடம்

புதுவெட்கம் கொண்டாளடி நிலமகளும்
உன்னழகை கண்டு உன்மேல் வேட்கை கொண்டேன் வேந்தன்நான்... விண்ணுலக
பெண்ணே விருப்பம் கொள்யென் மேல்..

அங்கம் எல்லாம் தங்கமாய் தகிக்கும் விண்மீனை தங்கபூக்கள்யென நீலவண்ணச்சேலையில் நித்தமும்
பதித்த பாரிவள்ளல் எவரோ...

இந்த பாரில்உளரோ நிகராக பாவையர் எவரும் உன்னழகில் உனை மிஞ்ச...
உனைக் கொஞ்ச மனம்தான் துடிக்குதடி
மஞ்சனையும் கெஞ்சுதடி மதப்பைகாண

நிலத்தினும் பெரிதே தேடினேன் கட்டிலை
காணோம் யென்அன்பைவிட பெரிதா ஆயினும் கண்டிட்டேன் நீர்சூழ் மறைவிடம்
வசமாய் வந்தாய் இச்சூரியனிடம் முழுநிலவு நாளில் முகவொளி கொண்டு

கடலினை கட்டிலாக கொண்டே காதலில் நாம் கொண்டாடி தீர்த்த மோகம்தான் இன்று மேகமாக வந்து வேகமாக வழிமறித்து வாசலாக
நின்றது நான்உனைக்காணும்போது ...

கட்டிலாக ஆன கடலும் கொண்டது அகிலத்தில் பெரிதாய் நீலநிறமும் நீள்அகலமெனும் நீண்டபயணமும் நீகழற்றிய நீலவண்ணச்சேலையால்

நிலவுப்பெண்ணே நீயேதான் என்கண்ணே
நம்மோகம் மேகமாக மாறியதை உலகிற்கு தந்திவிடு உதவிடட்டும் உருமாறி மாரி எனும் மழையாக மண்ணெல்லாம் மரமாக..

பின்குறிப்பு :1. சூரிய வெப்பத்தால் கடல்நீர்
ஆவியாகிறது
2. சந்திரனின்
ஈர்ப்புவிசையால்
கடல் அலை உருவாகிறது
3. மரங்களினாலும்
மலைகளினாலும் மேகம்
மழையாக வருகிறது

எழுதியவர் : பாளை பாண்டி (27-Jun-21, 12:38 pm)
பார்வை : 129

மேலே